உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வெந்நீர் கொட்டி சிகிச்சை பெற்ற பெண் உயிரிழப்பு

வெந்நீர் கொட்டி சிகிச்சை பெற்ற பெண் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, செங்காடு, வெங்கடேச பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிவேல், 45, இவரது மனைவி சந்திரா, 43. இவர், கடந்த அக். 21ம் தேதி மதியம், சமைத்துக் கொண்டிருந்தார்.அப்போது, எதிர்பாராத விதமாக வெந்நீர் சந்திரா உடல் மீது கொட்டியது. இதில், அவரது இடுப்பு மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரின் உறவினர்கள் அவரை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சந்திரா உயிரிழந்தார். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை