உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பெண்கள் 50 சதவீத மானியத்தில் தொழில் துவங்க அழைப்பு

பெண்கள் 50 சதவீத மானியத்தில் தொழில் துவங்க அழைப்பு

காஞ்சிபுரம்:பெண்கள் முன்னேற்ற திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி செய்திக்குறிப்பு:காஞ்சிபுரம் மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஆதரவற்ற பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோர் வாழ்வாதாரம் மேம்படுத்தும் நோக்கத்தில், 50 சதவீத மானியத்தில் உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரம் பெறலாம்.உரிய சான்றுகளுடன், ஜூலை- 14ம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், ஊரக வளர்ச்சி முகமை பழைய அலுவலக கட்டடம், காஞ்சிபுரம் முகவரியில் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !