மேலும் செய்திகள்
செங்கையில் வாராந்திர குறைதீர் கூட்டம்
07-Jan-2025
சிவகங்கையில் சமத்துவ பொங்கல் விழா
11-Jan-2025
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று காலை 11:00 மணிக்கு நடந்தது. இதில், பட்டா, நில ஆக்கிரமிப்பு, வேலைவாய்ப்பு, உதவித்தொகை என, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 428 பேர் மனு அளித்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், 2022 - -23ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான மணிமேகலை விருது பெற்ற, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும், சமுதாய அமைப்புக்கும், 3.5 லட்சம் ரூபாய்க்கான பரிசு தொகையும், சான்றிதழ்களையும் கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, திட்ட இயக்குநர் - மகளிர் திட்டம் - பிச்சாண்டி, ஆட்சியர் - பயிற்சி - மிருணாளினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் - பொது - சத்யா, மாவட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
07-Jan-2025
11-Jan-2025