உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  உத்திரமேரூரில் மகளிர் நலன் மருத்துவ வாகன சேவை துவக்கம்

 உத்திரமேரூரில் மகளிர் நலன் மருத்துவ வாகன சேவை துவக்கம்

உத்திரமேரூர்: உத்திரமேரூரில், மகளிர் நலன் நடமாடும் மருத்துவ வாகன சேவை துவங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தமிழகம் முழுதும் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனால், பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனையை வீட்டிற்கே சென்று மேற்கொள்ள, நடமாடும் வாகன மருத்துவ குழுக்களை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடமாடும் மருத்துவ வாகன சேவை துவக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், மகளிர் நலன் நடமாடும் மருத்துவ வாகன சேவையை துவங்கும் நிகழ்ச்சி, மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில் தலைமையில், உத்திரமேரூரில் நேற்று நடந்தது. உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, வாகன மருத்துவ சேவையை துவக்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார், ஒன்றிய தி.மு.க., செயலர் ஞானசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ