வேலை வாய்ப்பு முகாமில் 500 பேருக்கு பணி ஆணை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லுாரி வளாகத்தில், நேற்று, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை வகித்தார்.சிறு, குறு மற்றும் ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன், காஞ்சிபுரம் தி.மு.க.,- - எம்.பி., செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.கலெக்டர், அமைச்சர், எம்.பி., ஆகியோர் இணைந்து, 500 பேருக்கு வேலை வாய்ப்புக்குரிய பணி ஆணைகளை வழங்கினர்.காஞ்சிபுரம் தி.மு.க., - -எம்.எல்.ஏ., எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், வேலை வாய்ப்பு துணை இயக்குனர் அருணகிரி ஆகியோர் பங்கேற்றனர்.