சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு கல்வெட்டு கோவிலில் பந்தல் அமைக்கும் பணி
உத்திரமேரூர்:உத்திரமேரூரில் ஆனந்தவல்லி நாயகி சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை பிரம்மோத்சவ விழா, வரும் 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.அதில், மே 13ம் தேதி வரை தொடர்ந்து பத்து நாட்களுக்கு, பெருமாள் காலை, மாலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிம்ம வாகனம், யானை வாகனம், சந்திர பிரப பை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதியுலா வர உள்ளார்.அவ்வாறு பெருமாள் ஒவ்வொரு நாளும் வீதியுலா வரும்போது, பேருந்து நிலையம் அருகிலுள்ள வைகுண்ட பெருமாள் கல்வெட்டு கோவிலில் உள்ள மண்டபத்தில் தங்கி, பக்தர்களுக்கு அருள்பாலித்து செல்வது வழக்கம்.அவ்வாறு மண்டபத்தில் தங்கும் உற்சவரை தரிசிக்க வரும் பக்தர்கள், வெயிலின் தாக்கத்தினால் சோர்வடையாமல் இருக்க, கல்வெட்டு கோவிலில் உள்ள மண்டபத்தின் முன், பந்தல் அமைக்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி, உத்திரமேரூர் கல்வெட்டு கோவில் மண்டபம் முன் பந்தல் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.