உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி - செங்கை நெடுஞ்சாலையில் மண் குவியல் அகற்றும் பணி தீவிரம்

காஞ்சி - செங்கை நெடுஞ்சாலையில் மண் குவியல் அகற்றும் பணி தீவிரம்

வாலாஜாபாத்:சென்னை - கன்னியாகுமரி தொழிற்தடம் திட்டம் சார்பில், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை விரிவாக்கப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.ஏற்கனவே, 21 அடி அகலமாக இருந்த இச்சாலை, தற்போது 50 அடியாக அகலப்படுத்தப்பட்டுள்ளது. இச்சாலையில், வாலாஜாபாத் வழியாக, காஞ்சிபுரம் மற்றும் தாம்பரம், சுங்குவார்சத்திரம் போன்ற பகுதிகளுக்கும், பழையசீவரம், பாலுார் வழியாக ஒரகடம் மற்றும் செங்கல்பட்டுக்கும் தினமும் ஏராளமான வாகனங்கள் இயங்குகின்றன.இந்நிலையில், இச்சாலையின் நடுவே உள்ள மீடியன் பகுதியில், சில நாட்களாக மண் குவியல் அதிக அளவில் குவிந்துள்ளது. இதனால்,இச்சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்லும் போது, வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.எனவே, இச்சாலையில் குவிந்துள்ள மண் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் பலரும் வலியுறுத்தி வந்தனர்.அதன்படி, நெடுஞ்சாலைத் துறை சார்பில், வாலாஜாபாத் - செங்கல்பட்டு சாலையில், மீடியன் பகுதியையொட்டி குவிந்திருந்த மண் குவியல் அகற்றும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை