உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  சிறு தொழில் முனைவோருக்காக திருமுடிவாக்கத்தில் பயிலரங்கம்

 சிறு தொழில் முனைவோருக்காக திருமுடிவாக்கத்தில் பயிலரங்கம்

சென்னை: சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை நடத்தும் தொழில் முனைவோருக்கு நிதி மேலாண்மை, மார்க்கெட்டிங் உள்ளிட்டவை தொடர்பாக, சி.ஐ.ஐ., எனப்படும் இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்தும் இரு நாள் பயிலரங்கம், காஞ்சிபுரம், திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் இன்று துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கின்றன. அவற்றின் உரிமையாளர்களுக்கு, நிறுவனத்தின் நிதி மேலாண்மையை சிறப்பாக நடத்துவது, பொருட்களை சந்தைப்படுத்தும் மார்க்கெட்டிங் உதவி போன்றவை தொ டர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில், சி.ஐ.ஐ., ஈடுபட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் இணைந்து, தொழிற்பேட்டை வளாகத்தில் இன்றும், நாளையும் தொழில் முனைவோருக்கு பயிலரங்கம் நடத்துகிறது. இதுகுறித் து, திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்க துணை தலைவர் ஆர்.செல்வம் கூறியதாவது: நிறுவனத்தில் நஷ்டம் ஏற்படாத வகையில், லாபம் ஈட்டுவதற்கான விழிப்புணர்வு, தொழிற்சாலைகளின் இடர்பாடுகளை கண்டறிந்து களைதல், சிறந்த தொழிலாளர்களை மேம்படுத்துதல், விற்பனை உத்தியை அதிகரித்தல் உள்ளிட்ட பல பிரிவுகளில், தொழில்முனைவோருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த சிறு, குறுந்தொழில்முனைவோர் பங்கேற்று , பயன்பெற உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ