உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உலக ஆட்டிசம் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ஆட்டிசம் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

காஞ்சிபுரம்:ஆண்டுதோறும் ஏப்ரல் 2ம் தேதி உலக ஆட்டிசம் தின நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று ஆட்டிசம் தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன.புற உலக சிந்தனையற்றோர் எனப்படும் ஆட்டிசம் குறைபாடுள்ள நபர்களை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆதரவு அளிப்பதே இந்த நிகழ்வின் நோக்கமாகும்.கலெக்டர் கலைச்செல்வி கேக் வெட்டி விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து மாணவ- -மாணவியர் நடத்திய சிறப்பு நிகழ்ச்சி மற்றும் மாணவர்களின் தனித்திறமைகளை பார்வையிட்டார்.ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார்.தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியில் ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகள், பெற்றோர், ஆசிரியர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை