மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் கலெக்டர் தகவல்
09-May-2025
காஞ்சிபுரம்:மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் 2007ம் ஆண்டு துவக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலர் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களை மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நியமிக்கப்படுவர். தற்போது, மாற்றுத்திறனாளிகளின் நல வாரியத்திற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட உள்ளன.இதில், பார்வையற்றோர், செவித்திறன் பாதிக்கப்பட்டோர், தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோர், தவழும் மாற்றுத்திறனாளிகள், உயரம் குறைந்த மாற்றுத்திறனுடையோர், தொழுநோயில் இருந்து மீண்டோர், காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், வரும் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.மேலும், கை, கால் இயக்க குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளும் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
09-May-2025