உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாடியில் இருந்து விழுந்த இளம்பெண் உயிரிழப்பு

மாடியில் இருந்து விழுந்த இளம்பெண் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதுார்:நாகப்பட்டினம் மாவட்டம், மரைக்கான்சாவடியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி, 24. ஸ்ரீபெரும்புதுார் திருமங்கையாழ்வார் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி, சுங்குவார்சத்திரத்தில் உள்ள ‛பாக்ஸ்கான்' தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.நேற்று காலை வீட்டின் முதல் மாடியின் வெளியே, கைப்பிடி சுவரில் சாய்ந்தபடி நின்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில், அவருக்கு தலை மற்றும் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது.அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை