மேலும் செய்திகள்
குட்கா விற்றவர் கைது
29-Jul-2025
உத்திரமேரூர்:மருதம் ஏரிக்கரை பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த வாலிபரை உத்திரமேரூர் போலீசார் கைது செய்தனர். திருப்புலிவனம், மருதம் பகுதிகளில் உத்திரமேரூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மருதம் ஏரிக்கரை அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த, வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அதில், அரசால் தடை செய்யப்பட்ட 4 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. பின், விசாரணையில் பிடிபட்ட நபர் திருப்புலிவனத்தைச் சேர்ந்த உத்திரகுமார், 30, என்பது தெரிந்தது. இதையடுத்து, உத்திரமேரூர் போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து, உத்திரகுமாரை கைது செய்தனர்.
29-Jul-2025