உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  கஞ்சா விற்ற இளைஞர் கைது

 கஞ்சா விற்ற இளைஞர் கைது

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அருகே, முட்புதரில் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் வாடகைக்கு தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து, போந்துார், பால்நல்லுார், ஆரநேரி, மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடந்து வருகின்றன. இந்த நிலையில், ஸ்ரீ பெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் சாலையில், போந்துாரில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே, கஞ்சா விற்பனை செய்வதாக, ஸ்ரீபெரும்புதுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலை, அப்பகுதியில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள முட்புதரில் கஞ்சா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த, ஸ்ரீ பெரும்புதுாரைச் சேர்ந்த சரவணன், 24, என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 35,000 ரூபாய் மதிப்புள்ள 2,250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ