குட்கா விற்ற வாலிபர் கைது
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அமராவதிபட்டணம், படூர், குண்ணவாக்கம் ஆகிய பகுதிகளில், உத்திரமேரூர் போலீசார் நேற்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, அமராவதிபட்டணத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை அருகே, சந்தேகத்திற்கு இடமாக வடமாநில வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.போலீசார் அவரை பிடித்து சோதனை செய்ததில், அரசால் தடை செய்யப்பட்ட 1.5 கிலோ குட்கா பொருட்கள் விற்பனைக்கு மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.பின், பிடிபட்டவர் பீஹார் மாநிலம், கரகோஸ்ட் பகுதியைச் சேர்ந்த லட்சுமன் சிங், 32, என, விசாரணையில் தெரிய வந்தது. மேலும், குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.