உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே மேவளூர்குப்பம் மாந்தோப்பு தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன், 33. நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் உள்ள திறந்தவெளி கிணற்றின் அருகே அமர்ந்து மது அருந்தினார்.பின், மது போதையில் எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு, பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை