உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாள்வீச்சு விளையாட்டில் பயிற்சி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

வாள்வீச்சு விளையாட்டில் பயிற்சி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம், விளையாட்டு துறை அமைச்சர், 2024- - 25ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின்போது, அனைத்து மாவட்டங்களிலும், உயரிய தரத்தில், விளையாட்டு திறன் மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் அமைக்கப்படும் என அறிவித்தார்.இதன் அடிப்படையில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், ஸ்டார் அகாடமி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையம், வாள்வீச்சு விளையாட்டுக்காக மே 1ம் தேதி முதல், துவங்கப்பட உள்ளது.இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொள்ள வாள்வீச்சு விளையாட்டில் ஆர்வமுடைய, 12 - 21 வயது வரை உள்ள, 20 மாணவர்கள் மற்றும் 20 மாணவியர் என மொத்தம், 40 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.தேர்வு செய்யப்படும் மாணவ- - மாணவியருக்கு, ஒரு மாதத்தில் 25 நாட்கள் தொடர் பயிற்சி வழங்குவதோடு, சிற்றுண்டி, பயிற்சி உபகரணங்கள் மற்றும் விளையாட்டுச் சீருடைகள் போன்றவை வழங்கப்படும்.இம் மையத்தில் பயிற்சி மேற்கொள்வதற்கான தேர்வு, ஏப்ரல் 28ம் தேதி, மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. மேலும், வாள் வீச்சு பயிற்சி அளிக்கும் பயிற்றுனருக்கான தேர்வும் நடைபெற உள்ளது. 50 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். வரும் 20ம் தேதிக்குள் பயிற்றுனருக்கான பணிக்கு விண்ணப்பிக்கலாம்.மேலும் விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலரை 74017 03481 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை