உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி சர்ச் விழாவில் நடந்த பரிதாபம்

மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி சர்ச் விழாவில் நடந்த பரிதாபம்

நாகர்கோவில் : இனயம் புத்தன் துறை மீனவ கிராமத்தில் நடந்த சர்ச் திருவிழாவில், மின்சாரம் பாய்ந்து நான்கு பேர் உடல் கருகி இறந்தனர்.கன்னியாகுமரி மாவட்டம், இனயம் புத்தன் துறை புனித அந்தோணியார் சர்ச்சில், 12-வது நாள் திருவிழா நேற்று நடந்தது. இதற்காக, மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. அவற்றை சரி செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த ஏணி, சப்பர பவனிக்கு இடையூறாக இருந்ததால் அதை மாற்றி வைப்பதற்காக துாக்கி சென்றனர்.அப்போது மேலே சென்ற உயர் மின்னழுத்த கம்பியில் ஏணி உரசியது. இதில், மின்சாரம் பாய்ந்து ஏணியை துாக்கிச் சென்ற அதே கிராமத்தைச் சேர்ந்த விஜயன், 48, மனோ, 42, ஜஸ்டஸ், 38, ஷோபன், 38, ஆகிய நான்கு பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தனர். மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்து உடல்களை மீட்டனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்த நான்கு பேர் குடும்பத்திற்கும் தலா ௫ லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ