உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / சிறுவர்கள் பைக் சாகசம்; பெற்றோருக்கு தண்டம்

சிறுவர்கள் பைக் சாகசம்; பெற்றோருக்கு தண்டம்

நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில், விபத்துகளை தவிர்க்கும் வகையில் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, சிறுவர்கள் -டூ - வீலர்கள் ஓட்டி பிடிபட்டால், அவர்கள் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது.இந்த வகையில், நாகர்கோவில் டதி பள்ளி சந்திப்பில் பள்ளி விடும் நேரத்தில் இரண்டு சிறுவர்கள் பைக்கில் ஆபத்தான முறையில் சாகசம் செய்து ஓட்டி வந்தனர். நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த சிறுவர்கள், ஒழுகினசேரி மற்றும் பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர்கள் என, தெரிந்தது. இருவரது தந்தையும் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி