உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / ஜப்பான் மூளைக்காய்ச்சல் சிறுமி பாதிப்பு

ஜப்பான் மூளைக்காய்ச்சல் சிறுமி பாதிப்பு

நாகர்கோவில்:நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, இங்குள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரது ரத்தம், சிறுநீர் மற்றும் தண்டுவடத்தில் இருந்து எடுக்கப்பட்ட திரவம், பரிசோதனைக்காக சென்னை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அதில் அவருக்கு ஜப்பான் மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.எனினும், அந்த சிறுமி நல்ல ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதால், உயிருக்கு ஆபத்து இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மாவட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ