உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / திருவனந்தபுரத்தில் சிறுமி மாயம் குமரியில் தேடும் கேரள போலீஸ்

திருவனந்தபுரத்தில் சிறுமி மாயம் குமரியில் தேடும் கேரள போலீஸ்

நாகர்கோவில்:தாய் திட்டியதால் திருவனந்தபுரத்திலிருந்து மாயமான 13 வயது சிறுமியை தேடி கேரள போலீசார் கன்னியாகுமரியில் முகாமிட்டுள்ளனர்.அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அன்வர் உசேன். வேலைக்காக கடந்த மாதம் திருவனந்தபுரம் வந்த இவர் இங்கு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மகள் தஸ்மீக் தம்சம் 13. இவரை இங்குள்ள பள்ளியில் படிக்க வைக்க தந்தை முயற்சி செய்து வந்தார்.உசேனும் மனைவியும் அதிகாலையிலேயே வேலைக்கு சென்று விடுவர். நேற்று முன்தினம் தஸ்மீக் தம்சம் துாங்கி எழ தாமதமானதால் தாய் கண்டித்துள்ளார். பின்னர் இருவரும் வேலைக்கு சென்று திரும்பிய போது தஸ்மீக் தம்சம்வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கழக்கூட்டம் போலீசில் அன்வர் உசேன் புகார் செய்தார்.அவர் அசாம் மாநிலத்திற்கு சென்றிருக்கலாம்என்று கருதிய போலீசார்அந்த நேரத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட ரயிலை பாலக்காட்டில் நிறுத்தி சோதனை நடத்தினார். அதில் சிறுமி இல்லை.இந்நிலையில் சிறுமி கன்னியாகுமரி ரயிலில் பயணம் செய்ததாக ஒரு போட்டோ வெளியானதை தொடர்ந்து கேரளா போலீசார் தமிழக போலீசாரின் உதவியுடன் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையங்களில் சோதனை நடத்தினர். சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். சிறுமி கன்னியாகுமரி வந்த பின்னர் சென்னை ரயிலில் சென்றாரா என விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை