மேலும் செய்திகள்
போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ. 15 லட்சம் மோசடி
24-Sep-2025 | 1
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லுாரி மாணவி இறப்பு
20-Sep-2025
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே சாங்கை பண்டார விளையை சேர்ந்த தொழிலாளி சனந்தனன், 40. இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக குழந்தையுடன் தனியாக வசிக்கிறார். சனந்தனன் தாய் மேரி பாயுடன் வசித்தார்.நேற்று முன்தினம் இரவு, சனந்தனன் வீட்டில் பரோட்டா சாப்பிட்ட போது, தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தாய் தண்ணீர் கொடுத்தும் அவரால் குடிக்க முடியவில்லை. ஆம்புலன்ஸ் வாயிலாக குழித்துறை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மார்த்தாண்டம் போலீசார் விசாரிக்கின்றனர்.
24-Sep-2025 | 1
20-Sep-2025