உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / குமரியை மிரட்டும் முகமூடிக்கொள்ளையர்கள்

குமரியை மிரட்டும் முகமூடிக்கொள்ளையர்கள்

நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்று வீடுகளில் பல கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையரை போலீசார் தேடி வருகின்றனர்.நாகர்கோவில் வடசேரி சக்தி கார்டன் ஒன்பதாவது தெருவைசேர்ந்தவர் பகவதியப்பன். இஸ்ரோவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கோவையிலுள்ள மகனை காண சென்றார். பின் மனைவியை வீரவநல்லூரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு நாகர்கோவில் திரும்பினார். வீட்டை திறந்த போது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. மாடியில் இருந்த லாக்கர் திருடப்பட்டிருந்தது. அதிலிருந்து ஒன்றரை கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.12 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து பகவதியப்பன் அளித்த புகாரின்படி எஸ்.பி.,சுந்தரவதனம் சம்பவயிடத்தை பார்வையிட்டார். கொள்ளையர்களை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி., தெரிவித்தார்.சி.சி.டிவி., காட்சிகளில் கொள்ளையர்கள் முகமூடி அணிந்திருப்பதும், அவர்கள் பொருட்களை எடுத்துச் செல்வதும் பதிவாகி இருந்தது. சில நாட்களுக்கு முன் ஆசாரிப்பள்ளத்தில் ஓய்வு பெற்ற விஞ்ஞானி ரமேஷ் செல்லசாமி வீட்டிலும் முகமூடி கொள்ளையர்கள் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். திருவட்டார் அருகே ஒரு பைனான்ஸ் அதிபர் வீட்டிலும் முகமூடி கொள்ளையர்கள் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்தனர்.தொடர்ந்து முகமூடி கொள்ளையர்கள் வீடுகளில் கைவரிசை காட்டி வருவதால் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர். பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், சி.சி.டிவி., கேமரா மற்றும் எச்சரிக்கை விடுக்கும் உபகரணங்களை பயன்படுத்தவும் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ