வீட்டுக்கு வந்த மிளா காட்டுக்கு சென்றது
நாகர்கோவில்:நாகர்கோவில் அருகே பள்ளிவிளையில் உள்ள மத்திய அரசு குடோனில் ஒரு மிளா நடமாடியது. இதை பார்த்த தொழிலாளர்கள் அதை விரட்டிய போது அது பக்கத்து தெருவில் புகுந்தது. அங்குள்ள ஒரு வீட்டில் புகுந்த மிளா மாடியில் உள்ள ஒரு அறையில் பதுங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறை மற்றும் வனத்துறை ஊழியர்கள் மிளாவை பிடித்த போது உடலில் காயங்கள் இருந்தன. கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அதை காட்டுக்குள் விட்டனர்.