உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / தமிழகத்தின் முதல் பா.ஜ., எம்.எல்.ஏ., காலமானார்

தமிழகத்தின் முதல் பா.ஜ., எம்.எல்.ஏ., காலமானார்

நாகர்கோவில்:தமிழகத்தின் முதல் பா.ஜ., - எம்.எல்.ஏ., சி.வேலாயுதன், 73, அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே கருப்புகோட்டில் நேற்று காலை மாரடைப்பால் காலமானார்.அவர், 1996 - 2001ல் பத்மநாபபுரம் எம்.எல்.ஏ.,வாக இருந்தார். இவர், 13- வயது முதல் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டார். பின், ஹிந்து முன்னணி நிர்வாகியாக இருந்தார்.கடந்த, 1989, 1991 தேர்தல்களில் பத்மநாபபுரம் தொகுதியில் தோல்வி அடைந்தார். 1996 தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் பாலஜனாதிபதியை 4,540 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, தமிழகத்தின் முதல் பா.ஜ., - எம்.எல்.ஏ., என்ற பெருமையை பெற்றார்.அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் சிறந்த எம்.எல்.ஏ., என்ற பாராட்டையும் பெற்றார். மீண்டும், 2001, 2006 தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். தமிழக பா.ஜ., துணைத் தலைவராக பதவி வகித்துள்ளார்.தீவிர அரசியலில் இருந்து 2006க்கு பின்னர் விலகி, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் மட்டும் இயங்கி வந்தார். நேற்று முன்தினம் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, இரவு துாங்கச் சென்ற அவர், காலையில் இறந்த நிலையில் காணப்பட்டார்.மனைவி ஜெகதாம்பிகா சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். மகன் ராம் பகவத், மகள்கள் நிவேதிதா, சிவநந்தினி உள்ளனர். இன்று காலை, 10:00 மணிக்கு கருப்புகோட்டில் வேலாயுதன் உடல் தகனம் செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Raa
மே 13, 2024 14:23

ஒரு கும்பல் தமிழகத்தில் தாமரை வளரவே வளராது என்று கூவிக்கொண்டு உள்ளதே ???


saravanan
மே 09, 2024 22:53

தமிழகத்தில் கணக்கை துவங்கிவிட்டோம் என்று இவரின் வெற்றியை திருகருணாநிதியிடம் வாஜ்பாய் அவர்கள் பெருமை பொங்க சொன்னது அன்றைய நாளேடுகளில் முக்கிய இடம் பிடித்தது தமிழக பாஜக வரலாற்றில் மறைந்த வேலாயுதம் அவர்களுக்கு முக்கிய இடமுண்டு வாழ்க அவரது புகழ்


vijay
மே 09, 2024 12:15

ஆழ்ந்த இரங்கல்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை