உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / லஞ்ச சர்வேயரை பிடிக்க சென்ற போலீசாரை சிறைபிடித்த மக்கள்

லஞ்ச சர்வேயரை பிடிக்க சென்ற போலீசாரை சிறைபிடித்த மக்கள்

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே கூனாலுமூட்டை சேர்ந்தவர் அஜித் குமார். இவர், தனக்கு சொந்தமாக நான்கு சர்வே எண்களில் உள்ள நிலத்தை தனி பட்டா மாறுதலுக்காக கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதற்காக, கிள்ளியூர் நில அளவையர் ஞானசேகர், அஜித்குமாரிடம், 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.தர விரும்பாத அஜித்குமார், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஆலோசனைபடி, ஞானசேகரை தொடர்பு கொண்ட அஜித்குமார், பணம் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். அலுவலகத்தில் வைத்து பணம் வாங்கும் வழக்கம் இல்லாத ஞானசேகர், தாலுகா அலுவலகம் வெளியே இ - சேவை மையம் அருகில் நிற்குமாறு கூறி, அங்கு பைக்கில் வந்து பணத்தை பெற்றார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ஞானசேகரை சுற்றி வளைத்தனர். இதை அறியாத அப்பகுதி மக்கள், நில அளவையரை பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசாரை சுற்றி வளைத்து சிறை பிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தாங்கள் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் எனக்கூறி, தங்கள் அடையாள அட்டையை காட்டிய பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.தொடர்ந்து, நில அளவையர் ஞானசேகர், அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, விசாரணைக்கு பின் அவர் கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ