உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / 24 கி.மீ.,க்கு ஒரு மணி நேரம் சோதிக்கும் வந்தே பாரத் ரயில்

24 கி.மீ.,க்கு ஒரு மணி நேரம் சோதிக்கும் வந்தே பாரத் ரயில்

நாகர்கோவில்:சென்னை - நாகர்கோவில் இடையே 727 கி.மீ., துாரத்திற்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. அதிகாலை, 5:00 மணிக்கு சென்னையில் புறப்படும் இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி நிலையத்தை சரியான நேரத்திற்கு கடந்து செல்கிறது. ஆனால், நாகர்கோவில் வர நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் ஆகிறது.நேற்று இந்த ரயில் காவல் கிணறுக்கு மதியம், 1:15க்கு வந்தது. அங்கு சிறிது நேரம் நின்ற பின் அடுத்து ஆரல்வாய்மொழியில் நிறுத்தப்பட்டது. ஐந்து நிமிடங்கள் நின்ற பின் புறப்பட்டு, ஆமை வேகத்தில் நகர்ந்து புது கிராமம் ரயில்வே கேட்டை கடந்ததும், 20 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டது. உரிய நேரத்திற்கு, 20 நிமிடம் தாமதமாக, 2:10க்கு ரயில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் வந்தடைந்தது. சென்னையிலிருந்து காவல்கிணறு வரை, 702.5 கி.மீ., துாரத்தை 8 மணி நேரத்தில் கடந்த ரயில், காவல் கிணறில் இருந்து நாகர்கோவில் வரை, 24 கி.மீ.,யை கடப்பதற்கு 55 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது.நாகர்கோவில் ரயில் நிலைய அதிகாரிகள் கூறுகையில், 'இங்கு மூன்று நடைமேடைகள் மட்டுமே உள்ளன. நேற்று பெங்களூரு - கன்னியாகுமரி ரயில், 2:00 மணிக்கு நாகர்கோவில் வந்தது. அதை கன்னியாகுமரிக்கு அனுப்பிய பின்னரே, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை அனுமதிக்க முடிந்தது. நான்கு, ஐந்தாம் நடைமேடை கட்டும் பணிகள் முடிந்ததும் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி