உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / போலி தங்க நாணயம் விற்ற மூவர் சிக்கினர்

போலி தங்க நாணயம் விற்ற மூவர் சிக்கினர்

நாகர்கோவில் : மார்த்தாண்டம் அருகே காஞ்சிரக்கோடு கோட்டகத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 50. இவர் மார்த்தாண்டத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அவரது கடைக்கு வந்த ஒருவர், இரண்டு தங்க நாணயங்களை விற்பனை செய்துள்ளார். அதில், ஹால்மார்க் முத்திரை இருந்ததால், 1 லட்சம் ரூபாய் கொடுத்து, நாணயத்தை மணிகண்டன் வாங்கினார். பின், அதை சோதனை செய்தபோது அந்த நாணயம் போலி என தெரிந்தது.இது பற்றி அவர் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். போலீசார் 'சிசிடிவி' காட்சிகளின் அடிப்படையில், விசாரணை நடத்தியதில் களியக்காவிளை பொன்னப்பன் நகரைச் சேர்ந்த லெனின், 39, என்பவரை கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் தையாலுமூடு பிரதீப், 56, டொமினிக் லால், 36, கைது செய்யப்பட்டனர் அவர்களிடம் விசாரணை நடக்கிறது. போலி தங்க நாணயம் புழக்கத்தில் விடுவதில் வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ