உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / 108 ஆம்புலன்சில் நர்சை தாக்கியவர் கைது

108 ஆம்புலன்சில் நர்சை தாக்கியவர் கைது

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே விபத்தில் சிக்கியவரை 108 ஆம்புலன்ஸில் அழைத்து சென்ற போது நர்ஸ் சாலிமோளை 29, தாக்கி ஆடைகளை கிழித்தவரை போலீசார் கைது செய்தனர்.கன்னியாகுமரி மாவட்டம் முட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த சாலிமோள் குட்டைகுழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் நர்ஸாக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் காலை மார்த்தாண்டம் குளக்கச்சி அருகே தனியார் மதுபாரின் முன்பு வாகனத்தில் ஒருவர் காயமடைந்து கிடப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அப்பகுதிக்கு சென்றார்.அங்கு காயங்களுடன் இருந்த சுரேஷ் என்பவரை ஆம்புலன்ஸில் ஏற்ற கருங்கல் எட்டணி சிறு காட்டு விளையைச் சேர்ந்த ஜார்ஜ் செபஸ்டின் 32, உதவி செய்து உடன் சென்றார். குழித்துறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் சென்ற போது திடீரென ஜார்ஜ் செபஸ்டின் சாலிமோளின் கழுத்தை நெரித்து அவரை தாக்கி ஆடையை சேதப்படுத்தியுள்ளார். சாலிமோள் போட்ட கூச்சலில் மருத்துவமனை வளாகத்தில் நின்றவர்கள் திரண்டு ஜார்ஜ் செபஸ்டினை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சாலிமோள் புகாரின் பேரில் செபஸ்டின் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி