மேலும் செய்திகள்
சிறுமலையில் வேன் கவிழ்ந்து 22 மாணவர்கள் காயம்
17-Apr-2025
வேடசந்துார் : கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் அம்மாண்டிவிலை கட்டைக்காட்டைச் சேர்ந்தவர் பால்ராஜ் 40. ஆந்திர மாநிலம் குப்பத்தில் உள்ள தனியார் கம்பெனியில் உதவி மேலாளராக பணிபுரிகிறார். இவரது மனைவி நாகராணி 34, மகள் ஆசினி 10, மகன் அஜிந்த் 8, ஆகியோர் கட்டைக்காட்டில் வசிக்கின்றனர்.பள்ளி விடுமுறை என்பதால் பால்ராஜ் மனைவி, குழந்தைகளுடன் ஆந்திராவிற்கு காரில் சென்றார். காரை அவரே ஓட்டினார். வேடசந்துார் கல்வார்பட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது. பால்ராஜ், ஆசினி, அஜிந்த் காயமுற்றனர். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அஜிந்த் இறந்தார். எஸ்.ஐ., சுரேஷ்பாபு மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.
17-Apr-2025