உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / போலி தங்க நாணயம் கொடுத்து மோசடி செய்த இளம்பெண்

போலி தங்க நாணயம் கொடுத்து மோசடி செய்த இளம்பெண்

தக்கலை:கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையைச் சேர்ந்த பரமேஸ்வரன் மனைவி கிருஷ்ண குமாரி, 60. தக்கலையில் உள்ள தனியார் வங்கியில், 35,000 ரூபாய் எடுத்து, வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, 18 வயது மதிக்கத்தக்க பெண், கிருஷ்ணகுமாரியிடம், 'என் தந்தைக்கு ஆப்பரேஷன் செய்ய பணம் இல்லை. நீங்கள் பணம் இருந்தால் தாருங்கள். அதற்கு பதிலாக என்னிடம் உள்ள நகையை வைத்துக் கொள்ளுங்கள்' என, கூறினார்.அந்த பெண், கையில் இருந்த 19 நாணயங்கள் மற்றும் ஒரு தாலிக்கொடியை கிருஷ்ணகுமாரியிடம் கொடுத்தார். இதையடுத்து, கிருஷ்ணகுமாரி 35,000 ரூபாயை கொடுத்தார். வீட்டுக்கு சென்ற அவர், அந்த இளம்பெண்ணை மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது தொடர்பு கிடைக்கவில்லை. சந்தேகமடைந்த அவர், நாணயங்களை பரிசோதனை செய்தபோது போலி என, தெரிந்தது.ஏமாற்றம் அடைந்த அவர், தக்கலை போலீசில் புகார் கூறினார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை