உள்ளூர் செய்திகள்

குளத்தில் சிசு உடல்

கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் அருகே சம்பக்குளத்தில், நேற்று மதியம் தலை இல்லாத நிலையில் குழந்தை உடல் மிதந்தது. அக்குழந்தை, ஆணா, பெண்ணா என கண்டுபிடிக்க முடியாத நிலையில் மீன்கள் கடித்து உடல் உருக்குலைந்திருந்தது. பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையின் உடல், ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தவறான உறவில் பிறந்ததால், குழந்தையை கொன்று குளத்தில் வீசினரா அல்லது நரபலி கொடுக்கப்பட்டதா என, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ