உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / நகராட்சி அலுவலகத்தில் குப்பை கொட்டிய கவுன்சிலர் மீது வழக்கு

நகராட்சி அலுவலகத்தில் குப்பை கொட்டிய கவுன்சிலர் மீது வழக்கு

நாகர்கோவில்:தன் வீட்டில் குப்பை சேகரிக்காத துாய்மை பணியாளர்களை கண்டித்து, கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் நகராட்சி அலுவலக துப்புரவு ஆய்வாளர் மேஜையில் குப்பை கொட்டிய கவுன்சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.பத்மநாபபுரம் நகராட்சி,ஒன்பதாவது வார்டு சுயேச்சை கவுன்சிலர் வினோத் குமார், 52. இவரது வீட்டில் உள்ள குப்பையை, துாய்மை பணியாளர்கள் தொடர்ந்து சேகரிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.தொடர்ந்து, ஒரு பையில் சிறிது குப்பையை அள்ளி வந்த வினோத்குமார், அதை நகராட்சி அலுவலகத்தில், துப்புரவு ஆய்வாளர் ஆறுமுக நயினார் மேஜையில் கொட்டினார்.இதுகுறித்து, ஆணையர் லெனின், தக்கலை போலீசில் புகார் செய்தார். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில், கவுன்சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தலைமறைவாகிவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ