உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / வடிவீஸ்வரம் அழகம்மன் கோவிலில் தேரோட்டம்

வடிவீஸ்வரம் அழகம்மன் கோவிலில் தேரோட்டம்

நாகர்கோவில்:திருஞானசம்பந்தரால் பாடி புகழப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்தது, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவில். இங்கு மாசி திருவிழா பிப்., 15-ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி பவனி வந்து அருள்பாலித்தார்.கோவில் அருகே அமைக்கப்பட்ட, 'தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பைய்யர் நினைவரங்கத்தில் தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஒன்பதாம் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடந்தது.நேற்று காலை, 9:15 மணி-க்கு நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், தேவசம்போர்டு தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.நான்கு வீதிகளிலும் தேர் பவனி வந்தது. இன்று மாலை ஆராட்டுக்கு பின், தெருக்களில் ஆராட்டு பவனி வலம் வந்து திருக்கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ