வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தமிழக அரசின் சாராய கடைகளில் முதல்வரின் போட்டோ இருப்பது நியாயம்தானே . இதற்கு எதற்கு முதல்வரின் போட்டோவை வைத்த அப்பாவிகளை கைது செய்யனும் .
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் கம்பளம் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடையில் மாநில பா.ஜ., மகளிர் அணி தலைவி உமாரதி ராஜன், மாநகராட்சி கவுன்சிலர் சுனில் குமார், வடக்கு மண்டல தலைவர் ராணி, பொதுச் செயலாளர் ராஜேஷ் ஆகியோர் முதல்வர் ஸ்டாலின் படத்தை தொங்க விட்டனர். பின்னர் அவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.இதுகுறித்து விற்பனையாளர் நாராயணன் கோட்டார் போலீசில் புகார் செய்தார். மாநில மகளிர் அணி தலைவி உமாராதி ராஜன் உட்பட நான்கு பேர் மீதும் அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வடக்கு மண்டல தலைவர் ராணி கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
தமிழக அரசின் சாராய கடைகளில் முதல்வரின் போட்டோ இருப்பது நியாயம்தானே . இதற்கு எதற்கு முதல்வரின் போட்டோவை வைத்த அப்பாவிகளை கைது செய்யனும் .