உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / தண்ணீர் வாளியில் மூழ்கி குழந்தை பலி

தண்ணீர் வாளியில் மூழ்கி குழந்தை பலி

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே வீட்டில் விளையாடிய குழந்தை தண்ணீர் வாளியில் விழுந்து இறந்தது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் லியோன்நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கிய ஜெனோ. இவரது ஒன்றரை வயது மகள் ரியா னா, வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது தண்ணீர் வாளியில் தலை கீழாக விழுந்தது. தாயார் டயானா குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குளச்சல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !