போதையில் பஸ் ஓட்டிய டிரைவர்
நாகர்கோவில்: நாகர்கோவில் -- திருநெல்வேலி ரோட்டில் வெள்ளமடம் அருகே போலீசார் வாகன சோதனை நடத்தினர். நாகர்கோவிலிலிருந்து சென்னைக்கு சென்ற அரசு விரைவு பஸ் டிரைவரிடம் பிரீத் அனலைசர் (சுவாச பரிசோதனை கருவி) மூலம் பரிசோதனை நடத்தினர். அதில் டிரைவர் ஐயப்பன் போதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த தகவல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு மாற்று டிரைவர் வரவழைக்கப்பட்டு தொடர்ந்து பஸ் இயக்கப்பட்டது.