உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / பணியின் போது மின் ஊழியர் உயிரிழப்பு

பணியின் போது மின் ஊழியர் உயிரிழப்பு

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வடசேரியில் மின் பராமரிப்பு பணி நேற்று நடந்தது. மின் கம்பங்களை மாற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். மின் கம்பத்தின் மேற்பகுதியில் இருந்த சுரேஷ் என்ற ஊழியர் மயங்கிய நிலையில் தொங்கினார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மின்சாரம் தாக்கி இறந்தாரா அல்லது மாரடைப்பு ஏற்பட்டதா என பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும் என்று மின்வாரிய அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை