உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / குமரி மலையோர கிராமங்களில் மக்களை அச்சுறுத்தும் யானை

குமரி மலையோர கிராமங்களில் மக்களை அச்சுறுத்தும் யானை

நாகர்கோவில்:கன்னியாகுமரியில் இரவில் வீடுகளில் கதவுகளை உடைத்து உணவு தேடும் ஒற்றை காட்டு யானையை வனத்திற்குள் விரட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இம்மாவட்ட மலையோரத்தில் உள்ள கீரிப்பாறை, தெள்ளாந்தி, குற்றியாறு, மோதிரமலை, மயிலார் உள்ளிட்ட கிராமங்களில் காட்டு யானை தொல்லை இரண்டு மாதங்களாக அதிகரித்து வருகிறது. அரசு ரப்பர் கழகத்தின் பால்வட்டும் தொழிலாளி ராஜன் காட்டுயானை தாக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.ஜூன் 22 ல் குற்றியாறு கோவில்விளை பகுதியில் பல வீடுகளில் யானை சேதத்தை ஏற்படுத்தியது. வீடுகளின் கதவை உடைத்து அங்கிருந்த உணவுகளை சாப்பிடுவதை இந்த ஒற்றை யானை பழக்கமாக கொண்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு கீரிப்பாறை தொழிலாளர் குடியிருப்புகள் யானை புகுந்தது . மக்கள் பட்டாசு வெடித்தும் தீப்பந்தங்களை பிடித்தும் அதனை விரட்டினர்.இதனிடையே அந்த யானையை வனத்திற்குள் விரட்ட வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள், கன்னியாகுமரி எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை