உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / சூதாட்டத்தில் பணம் இழப்பு தீயணைப்பு வீரர் தற்கொலை

சூதாட்டத்தில் பணம் இழப்பு தீயணைப்பு வீரர் தற்கொலை

நாகர்கோவில்,:நாகர்கோவிலில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில், 17 லட்சம் ரூபாயை இழந்த தீயணைப்புத் துறை வீரர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி, 29, தீயணைப்பு துறை வீரர். கடந்த 2018ல், சென்னையில் பணியில் சேர்ந்த இவர், நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு 2022ல் பணி மாறுதல் பெற்று வந்தார். மனைவி மகேஸ்வரி. காதல் திருமணம் செய்த இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.நாகர்கோவில் ஒழுகினசேரியில் வாடகைக்கு இருந்தார். இரண்டு நாட்களுக்கு முன், ஆரல்வாய்மொழி அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். நாகர்கோவில் ரயில்வே போலீசார் விசாரித்தனர்.சமீபகாலமாக, ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி, 17 லட்சம் ரூபாய் வரை இழந்தார். இதனால், மன நெருக்கடிக்கு ஆளானவர் தற்கொலை செய்தது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை