உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / மாஜி இஸ்ரோ இன்ஜினியர் தற்கொலை

மாஜி இஸ்ரோ இன்ஜினியர் தற்கொலை

நாகர்கோவில்: மனைவி இறந்த வருத்தத்தில் இருந்த மாஜி இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரமோகன் 70. கன்னியாகுமரி மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோவில் இன்ஜினியராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் மகள் வீட்டில் வசித்து வந்தார்.ஆறு ஆண்டுகளுக்கு முன் மனைவி இறந்தார். அதிலிருந்து மன வருத்தத்துடன் காணப்பட்டார். அவரை மகள் தேற்றி வந்தார். இந்நிலையில் வெளியூர் சென்று வருவதாக கூறிவிட்டு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட சந்திரமோகன், காவல் கிணறு அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ