உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / பொங்கல் விழாவில் மனைவியரை சுமந்து ஓடிய கணவர்கள்

பொங்கல் விழாவில் மனைவியரை சுமந்து ஓடிய கணவர்கள்

நாகர்கோவில்:கன்னியாகுமரி அருகே நடந்த பொங்கல் விழாவில் மனைவியரை சுமந்து கணவர்கள் ஓடும் போட்டியில் 30க்கும் மேற்பட்ட ஜோடிகள் கலந்து கொண்டனர்.கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பாரதியார் நகரில் நான்காவது ஆண்டு பொங்கல் விழா நான்கு நாட்கள் நடந்தது.மூன்றாவது நாள் நிகழ்வில் மனைவியை கணவன் சுமந்தபடி ஓடும் ஓட்டப் பந்தயம் நடந்தது. இதில் கொட்டாரம் பேரூராட்சி துணைத் தலைவி விமலா அவரது கணவர் மரிய நேசன் உட்பட 30க்கும் மேற்பட்ட ஜோடிகள் கலந்து கொண்டனர். 50 மீட்டர் துாரத்துக்கு இந்த போட்டி நடைபெற்றது. 30 -- 40, 41--50 வயது என இரண்டு பிரிவுகளில் இந்த போட்டி நடந்தது.30 -- 40 வயது போட்டியில் மூர்த்தி -முத்துலட்சுமி தம்பதியினர் முதல் பரிசையும் தினேஷ் --விஜயலட்சுமி இரண்டாவது பரிசையும் பெற்றனர். 41-50 வயது பிரிவில் கண்ணன் - சுதா தம்பதி முதல் பரிசையும்ஆனந்த் - -அஜிதா தம்பதி இரண்டாவது பரிசையும் பெற்றனர்.மனைவியரை தோளில் சுமந்து ஓடும் இந்த போட்டியை காண அப்பகுதியில் உள்ள ஏராளமானோர் திரண்டிருந்தனர். அவர்கள் கரவொலி எழுப்பி போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ