மேலும் செய்திகள்
குமரி கடற்கரை கன்னியம்பலத்தை திறக்க வியாபாரிகள் எதிர்ப்பு
18 hour(s) ago
போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ. 15 லட்சம் மோசடி
24-Sep-2025 | 1
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லுாரி மாணவி இறப்பு
20-Sep-2025
நாகர்கோவில் : நாகர்கோவிலில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்தவரை மாவட்ட பொருளாதார குற்ற பிரிவு போலீசார் கைது செய்தனர். தக்கலை முத்தலங்குறிச்சியை சேர்ந்தவர் வேலாயுதன்பிள்ளை மகன் ராமகிருஷ்ணன் (51). இவர் நாகர்கோவில் வடசேரி, பொதுப்பணித்துறை ரோடு, மார்த்தாண்டம் ஆகிய மூன்று இடங்களிலும் அகிலம் பெனிபிட் பண்ட் என்ற நிறுவனத்தை கடந்த 1996ம் ஆண்டு துவங்கினார். அந்த பகுதியை சேர்ந்த பலரிடம் அதிக வட்டி தருவதாக டெபாசிட்டுகள் பெற்றார். உரிய காலத்தில் டெபாசிட் செய்தவர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. இந்நிலையில் 2003ம் ஆண்டு திடீரென நிறுவனத்தை மூடியுள்ளார். இதில் பணத்தை இழந்த சந்திரா என்பவர் நாகர்கோவில் பொருளாதார குற்றபிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராமகிருஷ்ணனை தேடினர்.
இந்நிலையில் அவர் ரயில் மூலம் சென்னைக்கு தப்பி செல்ல முயல்வதாக கிடைத்த தகவல்படி பொருளாதார குற்றபிரிவு டி.எஸ்.பி. மரைமலை, சப் இன்ஸ்பெக்டர் கிளாரன்ஸ்மேரி மற்றும் போலீசார் ரயில்வே ஸ்டேஷன் சென்று அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் மதுரை சிறப்பு கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ராமகிருஷ்ணன் ஏற்கெனவே கடந்த 2000ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை அகிலம் பெங்கர்ஸ் என்ற நிறுவனம் நடத்தி 345 பேரிடம் 1 கோடியே 44 லட்சம் ரூபாய் டெபாசிட் பெற்று மோடி செய்துள்ளார். இது தொடர்பாக சுப்பிரமணியம், பொன்னுபிள்ளை ஆகியோர் கொடுத்த புகாரின்படி பொருளாதார குற்றபிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் அவர் முன்ஜாமின் பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் பெனிபிட் பண்ட் நடத்தி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து பொருளாதார குற்றபிரிவு டி.எஸ்.பி. மரைமலை கூறும்போது, அகிலம் பெனிபிட் பண்ட் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் யாராவது இருந்தால் அவர்கள் உரிய ஆவணங்களுடன் ஒழுகினசேரியில் உள்ள பொருளாதார குற்றபிரிவு போலீசில் புகார் செய்ய வேண்டும். புகார் செய்கிறவர்களுக்கு பணம் திரும்ப கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
18 hour(s) ago
24-Sep-2025 | 1
20-Sep-2025