மேலும் செய்திகள்
போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ. 15 லட்சம் மோசடி
24-Sep-2025 | 1
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லுாரி மாணவி இறப்பு
20-Sep-2025
பூதப்பாண்டி : அழகியபாண்டியபுரம் சுற்றுவட்டார பகுதியில் மூன்று கோயில்களில் சமூகவிரோதிகள் புகுந்து சுவாமி சிலைகளை சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனிப்படை அமைத்து குற்றவாளிகளைப் பிடிக்க மாவட்ட எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.அழகியபாண்டிபுரத்தை அடுத்த எட்டாமடையில் இந்து நாடார் சமுதாயத்திற்குச் சொந்தமான முத்தாரம்மன் சுடலைமாட சுவாமி கோயில் உள்ளது. 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோயிலில் தினமும் இரண்டு வேளை பூஜை நடப்பது வழக்கம். சமீபத்தில் இக்கோயில் புனமைக்கப்பட்டு கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது. வழக்கம் போல் நேற்று காலை கோயில் பூசாரி அப்பாத்துரை கோயிலில் பூஜை நடத்துவதற்காக வந்தபோது பீடத்தில் சுவாமி சிலைகள் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்து, கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மர்ம நபர்கள் சுவாமி சிலைகளை சேதப்படுத்தியதுடன் அதனை சாக்கில் கட்டி அருகிலுள்ள கால்வாயில் கொண்டு போட்டுவிட்டு சென்றுள்ளனர்.சம்பவ இடத்தை பார்வையிட்ட நிர்வாகிகள் பூதப்பாண்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பூதப்பாண்டி சப்-இன்ஸ்பெக்டர் ராஜமார்த்தாண்டன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.இதேபோல் எட்டாமடை சங்குமுகத்தான் கோணம் சுடலைமாட சுவாமி கோயிலில், சுவாமி சிலைகள் முன் மர்மநபர்கள் வாந்தி எடுத்து அசுத்தம் செய்துள்ளனர். மேலும் அழகியபாண்டியபுரம் பெரியகுளத்தின்கரையில் சுடுகாடு அருகே உள்ள நான்கு அடி உயரமுள்ள சுடலைமாடன் மற்றும் இரண்டு அடி உயரமுள்ள பேச்சியம்மன் சுவாமியின் தலைகளை துண்டித்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து பூதப்பாண்டி போலீசார் மாவட்ட போலீஸ் எஸ்.பி., அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, எஸ்.பி., அருண், டி.எஸ்.பி., பாஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க அதிரடிப்படை போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.கோயில் சிலைகளை சேதப்படுத்திய சமூகவிரோதிகள் குடிபோதையில் இந்த செயலை மேற்கொண்டனரா என்பது உட்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை விரைவில் பிடிக்குமாறு மாவட்ட எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.சுவாமி சிலைகள் உடைப்பு சம்பங்களால் அழகியபாண்டியபுரம் சுற்றவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
24-Sep-2025 | 1
20-Sep-2025