உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அதே அதிகாரத்துடன் செயல்படுத்த வேண்டும் : இலங்கை எம்.பி.,

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அதே அதிகாரத்துடன் செயல்படுத்த வேண்டும் : இலங்கை எம்.பி.,

நாகர்கோவில் : முன்னாள்பிரதமர் ராஜிவ்காந்தி-இலங்கைமுன்னாள் ஜனாதிபதி ஜெயவர்த்தனே ஆகியோர் செய்து கொண்ட இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தை இந்திய அரசும், மாநில அரசும், அரசியல் கட்சிகளும் அதே அதிகாரத்துடன் செயல்படுத்த வலியுறுத்தவேண்டும் என இலங்கை மட்டகிளப்பு எம்.பி., சீனிதம்பியோகேஸ்வரன் நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறினார்.இன்று 2ம்தேதி சிவசேனா (தமழ்நாடு) சார்பில் மேல்புறம் ஜங்சனில் நடைபெறும் விநாயகர்சதுர்த்தி விசர்ஜன ஊர்வலத்தில் பங்கு பெற வந்த இலங்கை மட்டகிளப்பு எம்.பி., சீனிதம்பியோகேஸ்வரன் நாகர்கோவில் வந்தார். அவர் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டிஅளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-இலங்கையில் கடந்த பலநூறு ஆண்டுகளுக்கு முன் இந்துக்கள் வாழ்ந்துள்ளனர். இந்து ஆலயங்கள் பலஉள்ளன. குறிப்பாக சந்திரசேகரர் ஆலயம் பல நூறு ஆண்டு பழமையானது. இலங்கையில் 2 கோடி மக்கள் வாழந்து வருகின்றனர். இதில் 29 லட்சம் மக்கள் இந்துக்கள். அன்னியர் நாட்டை விட்டு போனபிறகு பவுத்தர்கள் நாட்டை ஆண்டுவருகின்றனர். அதன்பின் தமிழ்மக்களுக்கு கிடைக்க வேண்டிய அதிகாரங்கள் கிடைக்காமல் போனது. அகிம்சை வழியில் போராடி வந்த நிலையில் அகிம்மையை தவிர்த்து ஆயுதம் தாங்கி போராடினர். கடந்த 2009 மே 18ல் யுத்தம் முடிவுக்கு வந்தது. யுத்தசூழலில் மக்கள் பெரும் பாதிப்பு அடைந்தனர். இறுதி போரில் பலஆயிரகணக்கான மக்கள் உயிர்இழந்தனர். உடமைகள் இழந்தனர். பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் அனாதையாக்கப்பட்டனர்.பின்னர் 3லட்சத்துக்கும் அதிகமானோர் முகாமில் அமர்த்தப்பட்டனர். பலர் காணாமல் போனார்கள். இதனையடுத்து மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படவேண்டும் எனவும், காணமல்போனவர்கள் கண்டுபிடிக்கப்படவேண்டும் எனவும், பலதடவை பேச்சுவார்த்தை நடத்தியபின்பும் அரசு கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து தமிழ்தேசிய கூட்டமைப்பு இந்தியஅரசிடம் வேண்டுகோள் விடுத்தது. இந்தநிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு சார்பில் தேர்வு செய்யப்பட்ட 14 எம்.பி.,க்களும் பேச்சுவார்த்தை நடத்தியபின்னும் தீர்வு காணப்படவில்லை. இதற்கு தீர்வு காண இந்திய அரசால் மட்டுமே தீர்வு காணமுடியும் என நம்புகிறோம். இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, அரசியல் தீர்வு காணவேண்டும் என காத்து இருக்கிறோம். முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி- ஜெயவர்த்தனேஆகியோர் இந்திய-இலங்கை ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஆனால் ஒப்பந்தத்தின் படி அதிகாரம் வழங்கப்படவில்லை. இதனையடுத்து இந்தியா, மற்றும் வெளிநாடுகளுக்கும் இதுகுறித்து பேசிதீர்வுகாண வேண்டும் என எடுத்துகூறினோம். ஆனாலும் இலங்கை அரசிடம் பேசி முடிவுஎடுக்கப்படவில்லை.

கடந்த 8 மாதகாலமாக தமிழ்தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வுகாணப்படவில்லை. நாங்கள் கூறியபடி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்பதும், போரின் போது காணமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதும், போரின் போது கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதும், தமிழ்மக்களுக்கு அதிகாரம் வழங்கபட வேண்டும் என்பதும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு வருகிறது. இந்திய அரசு இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என கூறியது. ஆனால் ஆயிரம் வீடுகள் கூட கட்டப்படவில்லை. அதுபோன்று இந்திய அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிஉதவிகள், பல்வேறு உதவிகள் செய்தது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அது சென்றடையவில்லை. இனியாவதுநிதிகொடுக்கப்படும் போது தமிழ்தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்துகொடுக்கபடவேண்டும் என கூறுகிறோம். எங்களுடன் சேர்ந்து கொடுத்து இருந்தால் சிலருக்காவது கிடைத்து இருக்கும்.அண்மையில்மீண்டும் இலங்கையில் அவசரகாலநிலை ஏற்படுத்தப்பட்டது. நாங்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியதன் அடிப்படையில் திரும்பபெறப்பட்டது. சமீபகாலமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் போது இலங்கை தமிழர்கள் பிரச்சனை குறித்து அரசியல் கட்சிகள் குரல்கொடுக்கும். தேர்தலுக்கு பிறகு கண்டுகொள்வது கிடையாது. ஆனால் தமிழகமுதல்வர் ஜெ., தேர்தலுக்கு பிறகும் தமிழ்மக்களுக்காக குரல் கொடுத்துள்ளதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அதுபோன்று தமிழக சட்டசபையில் இயற்றப்பட்ட தீர்மானத்திற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.தூக்குதண்டனையை பொறுத்தவரை இலங்கையில் கூட பவுத்த அரசு மரணதண்டனை நிறைவேற்றுவது இல்லை. ஆனால் அகிம்சையை கடைபிடித்து வரும் இந்தியாவில் தூக்குதண்டனை என்பது ஏற்புடையது அல்ல. இந்திய அரசும், மாநில அரசும், இங்குள்ள அரசியல் கட்சிகளும் இலங்கை தமிழ்மக்களின் நலன்கருதி, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அதே அதிகாரத்துடன் செயல்படுத்த வலியுறுத்தவேண்டும் என்பதே எங்கள் நோக்கம் ஆகும். இவ்வாறு எம்.பி., சீனிதம்பி யோகேஸ்வரன் கூறினார். பேட்டியின் போது, சிவசேனா (தமிழ்நாடு) மாநில தலைவர் ராஜேஷ், மாநில பொதுச்செயலாளர் சிவாஜி, மாவட்ட தலைவர் பரமேஸ்வரன்தம்பி, இளைஞரணி அமைப்பாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ