மேலும் செய்திகள்
போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ. 15 லட்சம் மோசடி
24-Sep-2025 | 1
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லுாரி மாணவி இறப்பு
20-Sep-2025
மர்ம காய்ச்சல் பாதித்து மருத்துவ மாணவி பலி
19-Sep-2025
கன்னியாகுமரி : தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் விடுமுறை என்பதால், சர்வதேச சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. ரம்ஜான், விநாயகர் சதுர்த்தி என பண்டிகை காலத்தை முன்னிட்டு பெரும்பாலான பள்ளி,கல்லூரிகளுக்கு, ஐந்து நாட்கள் விடுமுறையளிக்கப்பட்டுள்ளது. விடுமுறைதினம் என்பதாலும், திருமணம் போன்ற விசேஷ நாட்கள் அடுத்தடுத்து வருவதாலும்,வெளியூரில் உள்ள பெரும்பாலானோர் விடுமுறையை கழிக்க சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.இதனால் சுற்றுலாபயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்களின் வருகையாலும், கன்னியாகுமரி சுற்றுலாபயணிகளால் களைகட்டி காணப்படுகிறது. பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகுதுறையில் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டனர்.மேலும் மாலை வேளைகளில் முக்கடல் சங்கமம், கடற்கரைசாலை, சன்செட் பாய்ண்ட்,சன்னதி தெரு,உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வாகன நெரிசல்: சுற்றுலாபயணிகள் வரும் கார்,டூ வீலர்கள் பார்க்கிங் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்த முடியாமல் திணறினர்.இதனால் காந்திமண்டபத்தில் இருந்து கடற்கரை சாலை பகுதியில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. கன்னியாகுமரியிலிருந்து வெளியூர் செல்லும், வாகனங்களால், வழுக்கம்பாறை, செங்கட்டி பாலம்,சுசீந்திரம், உள்ளிட்ட இடங்களில் பல மணிநேரம், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
24-Sep-2025 | 1
20-Sep-2025
19-Sep-2025