உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / ரத்தம் உறைவின்மை நோயால் 2 லட்சம் பேர் பாதிப்பு; ஹீமோ பீலியா பெடரேஷன் தலைவர் தகவல்

ரத்தம் உறைவின்மை நோயால் 2 லட்சம் பேர் பாதிப்பு; ஹீமோ பீலியா பெடரேஷன் தலைவர் தகவல்

கன்னியாகுமரி : ரத்தம் உறைவின்மை (ஹீமோ பீலியா) நோயால் இந்தியாவில் இரண்டு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஹீமோ பீலியா பெடரேஷனின் தென் பிராந்திய தலைவர் டாக்டர் அன்புராஜன் கூறினார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ரத்தம் உறைவின்மை நோய் குரோமோசோம் குறைபாட்டாலும், மரபு அடிப்படையிலும் இந்நோய் ஏற்படுகிறது.பெண்கள் மூலம் இந்நோய் கடத்தப்படுகிறது.இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கால்,வயிறு,கை போன்ற பாகங்களை பாதிக்கிறது.ரத்தக்கசிவு ஏற்படுவதன் மூலம் உடல் ஊனமடைகிறது.இந்நோய்க்கான மருத்துவச் செலவு மிக அதிகளவில் ஆகிறது.எனவே,ஏழைகளால் மருத்துவச் செலவை செய்ய முடியாத நிலை உள்ளதால் உள்நாட்டிலேயே இம்மருந்து தயாரிப்பு நடவடிக்கைகளை அரசு ஏற்படுத்த வேண்டும். அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளில் இம்மருந்து கிடைக்க,கடந்த ஆண்டு முதல் அரசு ஏற்பாடு செய்துள்ளது.ஆனால்,சரியான அளவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவக்காப்பீடு திட்டத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.மேலும்,அரசு வேலைவாய்ப்புகளிலும் இந்நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்தியா முழுவதும் இந்நோயால் இரண்டு லட்சம் பேரும், தமிழ்நாட்டில் 3ஆயிரம் பேரும்,தூத்துக்குடி, நெல்லை,கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை