உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / இறைச்சி கழிவுடன் குமரி வந்த கேரள மினி லாரி பறிமுதல்

இறைச்சி கழிவுடன் குமரி வந்த கேரள மினி லாரி பறிமுதல்

நாகர்கோவில்; கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே ஆறுகாணி பகுதியில் ஒரு பன்றி பண்ணைக்கு கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகள் வருவதாக தகவல் கிடைத்தது. ஆறுகாணி போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அவ்வழியே வந்த மினி லாரியில் இறைச்சிக்கழிவு இருந்தது. மினி லாரியை ஓட்டி வந்த டிரைவர் கேரளாவை சேர்ந்த ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர்.இதற்கிடையில் கேரளாவில் இருந்து பிளாஸ்டிக் குப்பைகளை ஏற்றி அருமனை ஊராட்சி பகுதியில் சிலர் போட்டு சென்றுள்ளனர். இது ஊராட்சி நிர்வாகம் சார்பில் எரிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட புகை அப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது.அந்தப் பகுதியை எஸ்.பி., ஸ்டாலின் ஆய்வு செய்தார். படப்பச்சை மற்றும் நெட்டா பகுதியில் உள்ள வாகன சோதனை சாவடிக்கு சென்று கேரளாவில் இருந்து வாகனங்களை முழுமையாக சோதனை செய்த பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்றும், ஆறுகாணியில் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிக் கழிவு வாகனம் சோதனைச் சாவடியை கடந்து வந்ததா என ஆய்வு நடத்தவும் எஸ். பி. உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி