உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / கன்னியாகுமரியில் பகவதி அம்மனை தரிசிக்கிறார் மோடி!

கன்னியாகுமரியில் பகவதி அம்மனை தரிசிக்கிறார் மோடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாகர்கோவில்: நாளை கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி, பகவதி அம்மனை தரிசிப்பதுடன், கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட உள்ளதாக தெரியவந்துள்ளது.லோக்சபா தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நாளை (30ம் தேதி) மாலை 4:35 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து நேரடியாக விவேகானந்தர் பாறைக்கு செல்லும் அவர் அங்கு தியானத்தை தொடங்குகிறார்.அன்று இரவும், மே 31 இரவும் அங்கு தங்கும் அவர் ஜூன் 1 மாலை அங்கிருந்து புறப்பட்டு கன்னியாகுமரி விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். பின், ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து டில்லி செல்கிறார்.பிரதமர் தங்குவதற்காக விவேகானந்தர் பாறையில் உள்ள கேந்திர நிர்வாக அதிகாரியின் அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு குளிர்சாதன வசதி செய்யப்படுகிறது. விவேகானந்தர் பாறையில் விவேகானந்தர் அமர்ந்து தியானம் செய்த இடத்தில் மூன்று நாட்கள் பிரதமர் தியானம் மேற்கொள்கிறார். இதனால், அவருக்கு தேவையான உணவுகள் அனைத்தும் விவேகானந்தர் பாறையில் அமைக்கப்படும் சிறப்பு அறையில் தயாரிக்கப்படுகிறது. பத்திரிகையாளர் உட்பட எவருக்கும் அனுமதி இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள் இங்கு செய்யப்பட்டு வரும் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.இந்நிலையில், நாளை கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி பகவதி அம்மனை தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் அவர் பார்வையிட உள்ளதாக தெரியவந்துள்ளது.

கண்காணிப்பு

பிரதமர் வருகையை முன்னிட்டு, கன்னியாகுமரி முழுவதும் தீவிர கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. விவேகானந்தர் மண்டபத்தை சுற்றிய பகுதிகள் அனைத்தும் கடற்படை, கடலோர காவல்படை வீரர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Senthoora
மே 29, 2024 21:01

அவர்சொத்து சேர்த்தார் இல்லையா என்று தெரிய அதானியின் சொத்து மதிப்பை பார்த்தல் தெரியும். ஆடம்பர உடை, அடிக்கடி வெளிநாடுபயணம், மாநிலத்துக்கு, மாநிலங்களில் இனம், மதம் பாகுபாட்டை சொல்லி மக்களை குழப்புவது. பிரமதமராக பேச தகுதி இல்லாதவர்.


ராம்குமார்
மே 29, 2024 19:40

நல்வரவு. புதிய இந்தியாவின் தந்தை மோடிஜி. உங்களால் பாரதம் பெருமையடைகிறது.


Senthoora
மே 29, 2024 21:03

வரும் 4 ஆம் திகதி தெரியும்.


Gopinathan S
மே 29, 2024 19:11

ஆடி அடங்கும் வாழ்க்கையில் தான் எத்தனை எத்தனை நாடகங்கள்? முடி சார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பல் என்ற தத்துவத்தை மனிதன் உணர்வது எப்போது?


Sathyanarayanan Sathyasekaren
மே 29, 2024 20:10

இந்த கருத்தை இங்கே ஏன் சொல்கிறீர்கள். இந்தனை வருடங்கள் பதவியில் இருந்தாலும், சொத்து சேர்க்காத உத்தம தலைவர் மோடி அவர்கள். திருட்டு அரசியல் குடும்பங்களுக்கு உங்கள் அறிவுரையை சொல்ல தயிரியம் இல்லாத கோழைகள்.


Anand
மே 29, 2024 17:42

இங்கு கூட்டுக்களவாணி கட்சிகளின் அல்லக்கைகள் இடும் கருத்துக்கள் யாவும் அவனுங்களோட தலைவனுங்களுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது.


Vathsan
மே 29, 2024 17:10

செல் போன் கட்டணங்கள் 17% உயர்வமே மோடிஜி.. உங்கள் கருத்து என்ன?


Ramanujadasan
மே 29, 2024 17:14

இதை aircell நிறுவனத்தை அடாவடியாக வாங்கினார்களே அவர்களிடம் கேளுங்கள்


முருகன்
மே 29, 2024 17:05

ஒட்டு போட்டு இவரை தேர்வு செய்தது மக்கள் என்பதை யாராவது ஞாபகம் படுத்துங்கள்


தமிழ்வேள்
மே 29, 2024 17:18

முருகா , அண்ணாதுரை கருணாநிதி சமாதிகளுக்கு விளக்கு போடும் உங்கள் திருட்டு திராவிஷ எம் பி , எம் எல் ஏக்கள் ஆகியோருக்கும் நீங்கள் சொன்னது பொருந்தும் தானே ?


Kanagaraj M
மே 29, 2024 16:55

கடவுளை மட்டுமே வழிபட்டு கொண்டுயிருந்தால், பதவிக்கான வேலையையும் பாருங்கள்.


Ramanujadasan
மே 29, 2024 17:07

ஐந்து வருடங்களில் வெறும் இரண்டே இரண்டு நாட்களில் மட்டுமே தியானம் செய்கிறாரா. மற்ற ஆயிரத்து எந்நூற்று இருவது மூன்று நாட்களில், ஓய்வே எடுக்காமல், குடும்ப இன்ப சுற்றுலா செல்லாமல், மருத்துவ மனைகளுக்கு சென்று நோய் சிகிச்சை பெறாமல், மேக் ஆப் போடாமல் இந்தியா மக்களுக்கு ஊழல் செய்யாமல் உழைக்கிறார். இது பொறுக்க முடிய வில்லையா


நாஞ்சில் நாடோடி
மே 29, 2024 16:28

பிதாமகனே வருக வருக.


Ramanujadasan
மே 29, 2024 16:18

தமிழக தேர்தல் சமயத்தில், அதன் பிறகும் கோவில் கோவிலாக செல்வது யாருங்க? நம்ம திராவிட மாடல் முதல்வரின் மனைவி. இதை கேட்க தைரியம் இல்லாத திராவிட கோழைகள், மோடியின் தியானத்தை கிண்டல் செய்ய வந்து விட்டார்கள். கேவலம் .


ராமகிருஷ்ணன்
மே 29, 2024 16:14

அப்படியே திருவள்ளுவர் சிலை அமைத்த போது திமுக சுருட்டியது எவ்வளவு என்று விசாரிங்க மோடிஜீ


மேலும் செய்திகள்





புதிய வீடியோ