உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / கள்ளத்தொடர்பால் பிறந்த குழந்தையை கொலை செய்த தாய் கைது; காதலனிடம் விசாரணை

கள்ளத்தொடர்பால் பிறந்த குழந்தையை கொலை செய்த தாய் கைது; காதலனிடம் விசாரணை

நாகர்கோவில்; கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை குளத்தில் வீசி கொலை செய்த நான்கு குழந்தைகளின் தாய் கைது செய்யப்பட்டார். காதலனிடம் விசாரணை நடந்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே பூவன்குடியிருப்பு பகுதியில் உள்ள சம்பக் குளத்தில் செப்.11ல் பச்சிளம் குழந்தை உடல் தலை இல்லாமல் மீட்கப்பட்டது. போலீசார் ஈத்தாமொழி அம்மச்சியார் கோவிலூரைச் சேர்ந்த ரேகா 38, என்பவரை கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலம் திருமணமாகி இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். 10 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்கிறேன். வீட்டு வேலைகள், பெட்ரோல் பல்க் என பல இடங்களில் வேலை பார்த்தேன். இளைஞர் ஒருவருடன் நெருங்கி பழகியதில் கர்ப்பமானேன். வெளியே தெரிந்தால் அவமானமாகிவிடும் என்பதால் கர்ப்பத்தை யாருக்கும் தெரியாமல் மறைத்து வந்தேன். செப்.6-ல் வீட்டில் வைத்து சுயப்பிரசவம் பார்த்தேன். பெண் குழந்தை பிறந்தது. வெளியே தெரியக்கூடாது என்பதற்காக குளத்தில் வீசிவிட்டேன். ஆனால் குழந்தையின் உடல் சில நாட்களில் மிதந்ததால் வெளியே தெரிந்து விட்டது. குழந்தையின் தலையை நான் அறுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார். குழந்தையின் தலை இதுவரை மீட்கப்படவில்லை. ரேகாவுடன் பழகிய நபர்தான் குழந்தையின் தலையை அறுத்திருப்பார் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக இளைஞர் ஒருவரை நேற்று போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை