மேலும் செய்திகள்
போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ. 15 லட்சம் மோசடி
24-Sep-2025 | 1
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லுாரி மாணவி இறப்பு
20-Sep-2025
மர்ம காய்ச்சல் பாதித்து மருத்துவ மாணவி பலி
19-Sep-2025
நாகர்கோவில்:கன்னியாகுமரி அருகே வீட்டின் உரிமை பெயர் மாற்றம் செய்வதற்கு பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கி கைதான பேரூராட்சி நிர்வாக அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே திட்டுவிளையைச் சேர்ந்தவர் சுந்தரம் 67. ஒரு பாகப்பிரிவினையில் தனக்கு கிடைத்த சொத்தில் உள்ள வீட்டின் உரிமையை தனது பெயருக்கு மாற்றக்கோரி பூதப்பாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த மூன்றாம் தேதி விண்ணப்பம் அளித்தார். ஆனால் அந்த மனு மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டது.இது பற்றி பேரூராட்சி நிர்வாக அதிகாரி பாலசுப்பிரமணியத்தை சந்தித்து கேட்டபோது பெயர் மாற்றம் செய்ய பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து சுந்தரம் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்களது ஆலோசனைப்படி பத்தாயிரம் ரூபாயை கொடுத்தபோது அதை வாங்கிய பாலசுப்பிரமணியத்தை போலீசார் கைது செய்தனர்.இதைத் தொடர்ந்து அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது . பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
24-Sep-2025 | 1
20-Sep-2025
19-Sep-2025